பெண்களின் துணை இல்லாமல் ஒற்றுமை அர்த்தமற்றது!

பெண்களின் ஒத்துழைப்பில்லாமல் உலகில் எந்த ஒரு வளர்ச்சியும் சாத்தியம் இல்லை என்பதே மறுக்க முடியாத மாபெரும் உண்மை.

ஆனால், இதை எல்லா ஆண்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக் கொண்டாலும் ஒப்புக்கொள்ள மனம் இருக்காது.

இந்த மகளிர் தினத்தில் சமூக முன்னேற்றத்தில் மகளிரின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக மாபெரும் தலைவர்களும் அறிஞர்களும் சொன்ன பொன்மொழிகளைத் தொகுத்திருக்கிறோம்.

****

பெண் கல்வியைப் பற்றி பேசும் பொழுது ஒரு சமுதாயத்திற்கான முழுத்திட்டம் பற்றியும் பேசுகிறோம்!
            – பாவ்லோ பிரைரா

உன்னதமான ஒரு சமுதாயத்தைப் படைக்க வேண்டுமானால், பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகள் எனும் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை ஒழிக்க வேண்டும்.
              – மார்க்ஸ் எங்கெல்ஸ்

பெண் தான் மூல, ஆரம்ப பாலினமானவள். பெண் தன்மைதான் மூலப்படிவமாகும். உயிரின் அடிப்படை வடிவம்.
             – அமெலிரி டிரீயின்கோர்ட்

பெண்களின் துணை இல்லாமல் ஒற்றுமை அர்த்தமற்றது. படித்த பெண்கள் இல்லாமல் கல்வி பலனற்றது, பெண்களின் பலம் இல்லாமல் போராட்டம் முழுமையடையாது.
            – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. பெண்கள், எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே, சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும்.

                  – காரல் மார்க்ஸ்

நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனிதகுல விடுதலை சாத்தியமே இல்லை.
              – லெனின்

ஆணும் பெண்ணும் ஜீவனில் ஒன்றுதான். ஒன்றுக்கொன்று உயர்வு – தாழ்வு கிடையாது. இரண்டும் மனித ஜீவனேயாகும்.
              – பெரியார்

08.03.2022 12 : 30 P.M

You might also like