தொப்பைப் போடுவதைத் தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்.
1. முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும்.
2. பசிக்கும்போது மிதமாக சாப்பிட வேண்டும். 75% போதுமானது.
3. வயிறு ரொம்ப சாப்பிட வேண்டுமேயானால் மதியம் உட்கொள்ளலாம்.
4. இரவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். முடியவில்லையென்றால் பழம் சாப்பிடலாம். இல்லை எனில் பால் குடிக்கலாம்.
5. இரவு நேரம் சப்பாத்தி அல்லது மாமிசம் சாப்பிடவே கூடாது. அது செரிமானம் ஆகாமல் நிறைய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
6. இரவு ஒரே நேரத்தில் படுத்து காலையில் ஒரே நேரத்தில் விழித்தல் அவசியம். நாம் நன்றாக இயங்குவதற்கு நல்ல தூக்கம் தேவை.
7. காலை ஏழுந்தவுடன் கொஞ்சம் வெந்நீரில் சீரகம் போட்டு குடித்தால் தொப்பை போய்விடும்.
8. மாதம் ஒருமுறை ஒரு வேளையாவது குறிப்பாக இரவு சாப்பாடு சாப்பிடாமல் தூங்கிவது நன்மை விளைவிக்கும்.
மெதுவாக அதை ஒரு நாள் முழுவதும் கூட செய்யலாம். நல்ல விளைவு இருக்கும்.
24.02.2022 10 : 50 A.M