விடுதலை என்பது வெட்டிப்பேச்சா?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க
– சொல்லிச்

சும்மா சும்மா வெறும்
வாயை மெல்லாதீங்க

நீங்க மெல்லாதீங்க
மதம், ஜாதி பேதம்
மனசை விட்டு நீங்கலே  – காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே
மக்கள் இன்னும் நடக்கலே.

(சுதந்திரம்)

குடிக்கத் தண்ணிரில்லாது பெரும்
கூட்டம் தவியாத் தவிக்குது – சிறு
கும்பல் மட்டும் ஆரஞ்சுப் பழ
ஜூசு குடிக்குது.

(சுதந்திரம்)

அடுக்கு மாடி மீது சிலது
படுத்துத் தூங்குவது – பல
ஆயிரக் கணக்கான மக்கள்
பாயில்லாமல் ஏங்குது.

(சுதந்திரம்)

ஊத்துக் கிணறு வெட்டச் சொல்லி
உதவி செஞ்சாங்க – பண
உதவி செஞ்சாங்க – அதில்
ஏத்தம் இறைக்குதான்னு யாரும்
பாக்க வல்லீங்க.

(சுதந்திரம்)

சோத்துப் பஞ்சம் துணிப் பஞ்சம்
சுத்தமாக நீங்கலே – இதில்
சுதந்திரம் சுகம் தருமென்றால்
யாரு நம்புவாங்க?

(சுதந்திரம்)

– கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து, இயக்கி 1951-ல் வெளிவந்த ‘மணமகள்’ படத்திற்காக உடுமலை நாராயண கவி எழுதிய பாடல் வரிகள்.

You might also like