வான் மேகம் எப்போது வண்ணமாகும்?

எம்.சோலை – கவிஞர், பாடலாசிரியர். சொந்த ஊர் காரைக்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறார். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், ‘தேன் சிந்துதே ஞானம்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளிட்டுள்ளார். அவரது கவிதைகள் சில…!

பெட்ரோல் விலை
*
விண்ணைத் தொடுவதிலேயே
குறியாய் இருக்கிற
பெட்ரோல் விலைக்கு
நம்மைத் தொடுவதற்கு மட்டும்
கைகள் ஊனமாகி விடுகின்றன.

******

‘யு’ சான்றிதழ்
*
பாம்பு எடுக்கும்
படங்களுக்கெல்லாம்
எப்போதும்
தணிக்கைக் குழுவில்
’யு’ சர்டிபிகேட் தான்.

******

தற்கொலைத் தவிர்
*
’டி’ குடித்த
சூட்டையே நம்மால்
தாங்கமுடியவில்லை
எப்படித் தான்
தீக்குளிக்கிறார்களோ?.

******

குளிர்சாதனப் பெட்டி
*
அறைக்குள் இருப்பவர்களுக்கு
வியர்வையைத் தவிர்த்து விட்டு
வெளியே தான் மட்டும்
சொட்டுச் சொட்டாய்
வியர்த்துக் கொண்டிருக்கிறது
குளிர்சாதனப் பெட்டி.

******

வண்ண மேகம்
*
வான் திரையில்
மேகம் என்றும்
கறுப்பு வெள்ளையாய்…
கோவாக் கலர்,
ஈஸ்ட்மன் கலருக்கு
முன்னேறுவது எப்போது?

******

அங்கே தான் ஒற்றுமை
*
அடுக்குமாடிக்
குடியிருப்பில் வசிப்பவர்களின்
மனங்கள் ஒன்றுபடவில்லை
மாறாக அவர்களின்
மலங்கள் தான்
ஒன்றுபடுகிறது.

******

தேன் கதை
*
தேனீக்கள்
மலர்களில் தேனை
எடுக்கிறது.
மனிதனோ
தேன் கூட்டில்
தேனை எடுக்கிறான்.

******

-எம்.சோலை

10.02.2022 12 : 30 P.M

You might also like