சகலமும் உனதொரு கருணையில் எழுவது!

‘மருதமலை மாமணியே முருகையா’ பாடலைப் பாடிய மதுரை சோமசுந்தரம் பிறந்ததினம் இன்று!

கர்நாடக இசை உலகம் ஏற்கெனவே அவரைக் கொண்டாடி வந்திருந்தாலும் “மருதமலை மாமணியே முருகையா’ என்ற ஒரே பாடல் மூலம் உலகம் முழுவதும் அதிகம் அறியப்பட்டவர் மதுரை சோமு.

தன்னுடைய கச்சேரிகளில் அதிகமான தமிழ்ப் பாடல்களையும் பாடி உலகெங்கும் உள்ள தமிழர்களது மனங்களில் இடம் பிடித்தவர். அவரது நினைவாக மருதமலை பாடல் வரிகள்.

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
மருதமலை மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

(மருதமலை) 

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

(மருதமலை) 

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா 

(மருதமலை) 

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் 

(மருதமலை) 

சக்தித் திருமகன் முத்துக்குமரனை
மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட
வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா 

(மருதமலை) 

– 1972-ம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இசை – குன்னக்குடி வைத்தியநாதன். குரல் – மதுரை சோமு

You might also like