பரண் :
வ.வே.சு.ஐயர் சேரன்மாதேவியில் முப்பது ஏக்கர் நிலத்தை வாங்கி குருகுலத்தைத் துவக்கியபோது அதற்கு காங்கிரஸ் செயற்குழு பத்தாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்தது.
பாரதக் கலாச்சாரமுறைக்கல்வி பயிற்றுவிக்கப்பட்ட அந்தக் குருகுலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தன்னுடைய மகனைப் படிக்க அனுப்பினார்.
தமிழ், சமஸ்கிருதம், இந்தி தவிர அங்கு பயிற்றுமொழியாக இருந்தது ஆங்கிலம்.
ஆனால் அங்கு பிராமண மாணவர்களுக்குத் தனிச் சாப்பாடு. தனியாகக் குடிநீர். பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியே சாப்பாடு,குடிநீர். இதை மீறினால் தண்டனையும் உண்டு.
ஆனால் அங்கு பிராமண மாணவர்களுக்குத் தனிச் சாப்பாடு. தனியாகக் குடிநீர். பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியே சாப்பாடு,குடிநீர். இதை மீறினால் தண்டனையும் உண்டு.
விடுமுறையில் தந்தையான ஓமந்தூராரைப் பார்க்க வந்த பையன் அப்பாவிடம் கேட்டான்.
”அங்கே தனியாகச் சாப்பாடு போடுறாங்க…பிராமண மாணவர்களுக்குத் தனிச்சாப்பாடு. தண்ணி குடிக்க தனி நீர்ப்பானை. அந்தப் பானையில் தண்ணி குடிச்சதுக்காக நான் அடி வாங்கினேன்..”
என்று விவரித்த பையன் அடுத்துக் கேட்ட கேள்வி ஓமந்தூராரை உலுக்கியது.
என்று விவரித்த பையன் அடுத்துக் கேட்ட கேள்வி ஓமந்தூராரை உலுக்கியது.
‘’ தீட்டுன்னா என்னா நைனா?”
முதல்வராக இருந்தாலும், அதிர்ந்தார் ஒரு தந்தையாக.
பிரச்சினை பெரியாருக்குப் போனது.
பிரச்சினை பெரியாருக்குப் போனது.
குருகுலத்தை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டு குருகுலத்தில் நிலவி வந்த சாதிப்பிரிவினையை உறுதிசெய்தது.
குருகுலத்தில் சமபந்தி முறையை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்தும் வ.வே.சு. ஐயர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. காந்தி தலையிட்டபோதும் ஐயர் ஒப்புக் கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட குருகுலத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் நிதி கொடுத்ததற்கு காங்கிரஸ் செயற்குழு வருந்துகிறது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியார் அப்போது சொன்னார்.
பெரியார் அப்போது சொன்னார்.
”சாதிப்பாகுபாட்டிற்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் வழிவகுத்திருந்தால் அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்”
(அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மணா’வின் ‘’தமிழகத் தடங்கள்’’ நூலிலிருந்து)