– உயர்கல்வித் துறை உத்தரவு
“பேருந்துகளில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு கல்லுாரியிலும் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்” என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர்கல்வித் துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதில், “மாணவர்கள் கல்லுாரிக்கு வரும்போது பேருந்துகளில் ரகளை செய்வதும், கூரை மேல் ஏறுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள், கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன.
எனவே, இனி கல்லுாரி பேருந்துகளில், படிக்கட்டுகளில் தொங்குவது, ஜன்னல்களில் தொங்குவது என ரகளை செய்யும் மாணவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களை பெற்றோருடன் அழைத்து, உளவியல் கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.
அவர்களது மோசமான நடத்தையை மாற்றி, கல்வியில் முன்னேற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஒவ்வொரு கல்லுாரியும், பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.