“பாய்ஸ் கம்பெனியில் என்னுடன் இருந்த நடிகர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்.
இப்போது பகுத்தறிவு வளர்ந்த காலம். சாதி என்று பேசுவதே தவறு. அப்படிப் பேசுவது அறியாமை என்றும் நம்பும் காலம் இது.
அந்த நாடகக் கம்பெனியில் “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் நடிகர்கள்” என்ற எண்ணம் மட்டும் தான் ஒவ்வோர் உள்ளத்திலும் வேர் விட்டிருந்தது.
அதிகம் ஏன்?
ஒரு பானைச் சோற்றை ஒரே பந்தியில் உட்கார்ந்து உண்டு வளர்ந்தோம்.
அந்த நாடகக் கம்பெனி எனது உள்ளத்தில் விதைத்த விதை தான் பகுத்தறிவு இயக்கத்தில் பணியாற்றக் காரணமாயிற்று.”
- 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தாய்’ இதழில் எம்.ஜி.ஆர் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.