விண்வெளியில் ஒலிக்கப்போகும் இளையராஜாவின் இசை!

உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் எடையைக் குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம்பெறும் எனத் தெரிகிறது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இஸ்ரோ உதவியுடன் விண்ணிற்கு ஏவப்பட உள்ளது.

கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார்.

பாடலை சுவானந்த் கிர்கிரே எழுத, இளையராஜா பாடி இசையமைத்துள்ளார்.

இதன்மூலம் விரைவில் விண்வெளியில் இளையராஜாவின் இசை ஒலிக்க இருக்கிறது. இதனை இசைப்பிரியர்களும் இளையராஜாவின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

You might also like