– தழுதழுத்த கக்கனின் மகன்.
****
2001 ஆம் ஆண்டு.
மதுரை மேலூருக்கு அருகே கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி.
அதிகப் படியான கூட்டம்.
முதலில் பேசிய சபாநாயகரான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் “கக்கன் ஒருமுறை என்னைச் சந்தித்து “என் மூத்த மகனைப் பார்த்துக்கிடுங்க.. அவனோட வருமானத்தில் தான் குடும்பமே நடக்குது”ன்னு சொன்னார்.
அவ்வளவு ஒழுக்கமான தலைவர் அவர். அத்தகைய மனிதருக்கு மணிமண்டபம் கட்டிய முதல்வரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்” என்று சொல்ல, அடுத்துப் பேச வந்தார் முதல்வரான கலைஞர்.
“கக்கனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டே அறிவித்தேன். இதைத் தேர்தல் அறிவிப்பு என்று நினைத்துவிடாதீர்கள்.
கூட்டணியில் தலித்துகளை அழைக்கவில்லையா என்று நிருபர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
நான் அதற்கு “அழைக்க வேண்டிய நேரத்தில் அழைப்பேன்.. வரவேண்டிய நேரத்தில் அவர்கள் வருவார்கள். நானே தலித் தானே” என்றார் கலைஞர்.
தன்னுடைய தந்தைக்கு மணிமண்டபம் அமைத்ததற்கு நன்றி சொன்னார் கக்கனின் மகனான சத்திய நாதன்.
“எங்க அப்பாவை உலகறியச் செஞ்சுட்டீங்க.. எங்க குடும்பம் வரும் தலைமுறைக்கும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும்” என்று தழுதழுத்தது அவருடைய குரல்.