மனதை ஆக்கிரமிக்கும் கவலைகளை விரட்டுவோம்!

ஜான் லீச்-சின் நம்பிக்கை மொழிகள்

இருபது ஆண்டுகளுக்கு மேலான வாழ்வியல் பயிற்சிகளில் அனுபவமிக்க தன்னம்பிக்கை எழுத்தாளர். தனிநபர் தொடங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை வெற்றிக்கான சூத்திரங்களைக் கற்றுத் தந்தவர். தொழில்முனைவோர்களை உருவாக்கும் புகழ்பெற்ற வின்னிங் பிக் என்ற நிறுவனத்தின் தலைவர்.

அவரது நம்பிக்கை மொழிகள் சில…!

*****

வெற்றிப்பாதையில் பயணப்படுவதற்கு முன்னால் எங்கே போகவேண்டும் எப்படிப் போகவேண்டும் என்று நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கு உங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களது பெரிய விருப்பத்தை அடையாளம் கண்டுகொள்வதே உங்கள் இலக்கை அடைவதற்கும், மனம் நிறைவடைவதற்கும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் வழிவகுத்துவிடும். அதுவே குடும்பத்தினர், உடன் பணிபுரிவோர் அனைவரிடமும் சிறந்த உறவினை ஏற்படுத்தும்.

நீங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கோ, ஒரு புதிய பாதையில் பயணப்படுவதற்கோ, சொந்தமான ஒரு தொழிலைச் செய்வதற்கோ முயற்சி செய்யும்போது தறிகெட்டு ஓடும் மனதிற்குக் கடிவாளமிட்டு மனம் விட்டுப் பேசக்கூடிய மனிதர்கள் உங்களைச் சுற்றி வைத்துக்கொண்டால் வெற்றியின் இலக்கை அடைந்துவிடலாம்.

எதிர்காலக் கனவுகளை எட்டிப்பிடிப்பதற்கு தெளிந்த சிந்தனை மிக அவசியம். இதற்காக சில காலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனத்தை ஆக்கிரமிக்கும் தினசரி கவலைகளை தாண்டி தெளிவாகச் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். பிறகு முன்னே செல்வதற்கான வழி தெரிய தொடங்கும்.

வாழ்க்கையில் கடைசியில் எங்கே இருக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றிய ஒரு எதிர்நோக்கினைக் கொண்டிருத்தலே பெரிய சாதனை.

மேலும் உங்கள் பெரிய விருப்பத்தைப் பின்பற்றிப் பயணப்படுவதற்கான பெரிய படியுமாகும்.

உங்கள் வாழ்வின் இடைக்கால இலக்குகளை வெற்றிகரமாக இருத்தி வைத்துக்கொள்வதற்கு, அவை உங்களுடைய இறுதி இலக்கான வாழ்க்கை சாதனையுடன் ஒத்துப்போகின்றனவா என்று உறுதி செய்துகொள்வதில்தான் இருக்கிறது.

நோக்கம் பற்றிய சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்ட உங்கள் எதிர்காலக் கனவுகள்தானஅ வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கும் இந்த சிந்தனைகள் உங்கள் செல்பாடுகளை ஊக்கமூட்டி, இலக்கை நோக்கிப் பயணப்பட வைக்கும்.

உங்களை ஆதரிப்பவர்களில் யாரெல்லாம் உங்களுக்கு உண்மையாக உறுதுணையாக இருக்கிறார்கள் என்று அடையாளம் கண்டு வைத்துக்கொள்வதும் வெற்றிக்கான ரகசியங்களில் ஒன்றாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எப்போதும் உங்கள் வெற்றிப்பாதையின் பயணத்தில் இருந்து யாரையும் உங்களை கீழே இறக்கிவிடுவதற்கு அனுமதித்து விடாதீர்கள்.

உங்கள் எதிர்கால இலட்சியத்தை அடைவதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முதலில் நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதைத் தீர்மானிக்கவேண்டும். உங்கள் லட்சியமும் கனவுகளும் எதுவாகவும் இருக்கலாம்.

புதிய முயற்சிகளையும் புதிய திட்டங்களையும் நம்பிக்கை இழந்த மனப்பான்மையுடன் செய்யத் தொடங்கினால் தோல்வியில்தான் அது முடியும். எனவே உங்கள் வெற்றிப் பயணத்திற்கான ஒரு தொடக்கத்தை எவ்வாறு செய்யப்போகிறீர்கள் என்பது முக்கியம்.

எத்தகையா வழியிலாவது வெற்றியடைந்து விடவேண்டும். அது நியாயமாகவோ அநியாயமாகவே இருந்தால், அதுவே திரும்பி வந்து உங்களைத் தாக்கிவிடும். வெற்றி அடைந்துவிட்டதாக நீங்கள் நினைத்தாலும், அது கடையில் வெறுமையாகவே முடியும்.

வெற்றி அடைவதற்கான உங்கள் குணாதிசியங்களில் சமரசம் செய்துகொள்வதோ, எது சரி, எது தவறு என்று கவனிக்கக்கூடிய உங்கள் நம்பிக்கையை விட்டுக்கொடுப்பதோ கூடவே கூடாது.

நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும், சரியான செயல்களை சரியான முறையில் செய்வதால் மட்டுமே நீண்டகால வெற்றியின் பயனை அனுபவிக்க முடியும்.

உங்கள் எதிர்காலக் கனவுகளை அடையக்கூடிய வெற்றிப் பயணத்தை நங்கள் மேற்கொள்ளும்போது, இடையே குறுக்கிடும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாதை முழுவதும் பல மைல்கற்களைக் கடப்பது உங்கள் கனவை அடைய வழிவகுக்கும்.

வாழ்க்கையில் ஒரே சிந்தனையுடனும் ஒரே குறிக்கோளுடனும் நாம் பயணப்பட்டால், வெற்றியை எளிதாக அடையும் முடியும்.

நீங்கள் போகும் வழியில் உள்ள எச்சரிக்கை அடையாளங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். வாய்ப்புகளை அடையாளம் கண்டு அதிலுள்ள சவால்களை சமாளிக்கக்கூடிய மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

உங்கள் இலக்குகளை அடைவதற்கு உண்மையிலேயே நீங்கள் செயல்படுக்கிறீர்களா என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதே நீங்கள் எதிர்பார்ப்பதைவிட சிரமமான செயலாக இருக்கும்.

-தான்யா

29.12.2021  12 : 30 P.M

 

You might also like