அமேசான் கிண்டில் தளத்தில் திராவிடர் கழக நூல்கள் சாதனை‌!

பெரியார் நினைவு நாளில், அமேசான் கிண்டில் தளத்தில் திராவிடர் கழக நூல்கள் இலவச தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டன.

அமேசான் நிறுவனம் அதிகமான விற்பனை மற்றும் தரவிறக்கம் செய்யப்படும் முதல் 100 புத்தகங்களைத் தினமும் வெளியிடுவர்.

அந்த வகையில் “பெஸ்ட் செல்லர்” வரிசையில் 1 முதல் 48 ஆவது இடம் வரை பெரியார் புத்தகங்களே இடம் பெற்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரியார் நூல்களை ஒரே நாளில் தரவிறக்கம் செய்துள்ளனர்.

இந்நிகழ்வு அமேசான் கிண்டில் தளத்தில் இதுவரை நடந்திராத ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும்!

28.12.2021 10 : 50 A.M

You might also like