துயரத்தில் இருந்து விடுபட தற்கொலையா?

“துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள்.
நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன். அனுபவத்திற்காகவாவது அனைத்து விதமான சூழல்களிலும் வாழ வேண்டும். வெறும் அனுபவத்திற்காகவாவது!

வாழ்க்கை மிக அரிதான அற்புதமான ஒன்று. நாம் அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் வாழ நம்மை பழக்கிக்கொள்ள வேண்டும். அதீத துயர் நிலையிலும் வாழ்ந்திருக்க வேண்டும்.
அதிகளவிலான துயரத்துடன் வாழ்க்கையில் நம்மால் பயணிக்க முடியும். அது வாழ்க்கையின் ஒரு கூறு. அதே சமயத்தில், எதுவொன்றையும் எதிர்ப்பதற்கும் நம்மிடம் மற்றொன்று இருக்கவே செய்கிறது.

அதில் முக்கியமான ஒன்று நகைச்சுவை.

நகைச்சுவை ஒருவனை இயல்பானவனாக இருக்கவே பேருதவி செய்கிறது என்று நினைக்கிறேன்.
துன்பம் வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகவும், அதனை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தை நகைச்சுவை நமக்கு அளிக்கிறது என்றும் கருதுகிறேன். நகைச்சுவை உலகளாவிய ஒன்று.

அது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கருணையுணர்வில் இருந்தே பிறப்பெடுத்திருக்க வேண்டும்.”

  • சார்லி சாப்ளின் கூற்றிலிருந்து…
You might also like