இப்போது இந்தச் சட்டங்களை யார் எழுதுகின்றார்கள்?

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை 15 அறிஞர்கள் கொண்ட வரைவுக் குழு எழுதியது. அந்தக் குழுவுக்குத் தலைவர் அண்ணல் அம்பேத்கர்.

375  உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், அந்த முன்வரைவை ஆராய்ந்து, கருத்துகளைப் பரிமாறி ஏற்றுக்கொண்டு இயற்றியது.

அதன்பிறகு, நாடாளுமன்றம், காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய புதிய சட்டங்களை இயற்றிக் கொண்டே இருக்கின்றது. பழைய சட்டத்தில் திருத்தங்கள் செய்கின்றது.

இப்போது இந்தச் சட்டங்களை யார் எழுதுகின்றார்கள்?

சட்ட அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கு உரைஞர்கள் எழுதுகின்றார்கள்.

அவர்கள், பல்வேறு நாடுகளின் சட்டங்களைப் படித்துப் பார்த்து இந்தியாவின் தேவைக்கு ஏற்ப திருத்தங்கள் செய்கின்றார்கள்.

அதற்கு இரண்டு துறைகள் உள்ளன.

1. Department of Legal Affairs

இந்தக் குழுவில் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பில் வாதங்களை எடுத்து உரைக்கின்ற வழக்கு உரைஞர்கள் இடம் பெறுகின்றார்கள்.

2. Legislative Department.
சட்ட வடிவமைப்புத் துறை.

இவர்கள்தான் புதிய சட்டங்களை எழுதுகின்றார்கள். இவர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்ல மாட்டார்கள். முழுநேர எழுத்துப் பணி தான்.

அந்தச் சட்ட முன்வரைவு Bill நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்துப் பார்த்து திருத்தங்கள் சொல்கின்றார்கள்.

பெரும்பாலும் அரசு கொண்டு வருகின்ற சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சில சட்டங்களுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும்.

அத்தகைய சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்புவார்கள்.

சான்றாக, பெண்கள் திருமண வயது 21 ஆக்குவதை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப அரசு ஒப்புக் கொண்டு இருக்கின்றது.

-அருணகிரி

22.12.2021  6 : 30 P.M

You might also like