– தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கொரோனா ஒமிக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
ஒமிக்ரான் வேகமாக பரவிவரும் நிலையில் மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளவை:
“ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
ஒமிக்ரான் பரவலைத் தடுக்க உள்ளூர் மட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
கொரோனா அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
22.12.2021 12 : 50 P.M