மிகை சமுதாயத்திற்கும் ஆபத்து!

*

தடைச்சட்டங்கள்

மிகுதியாக ஆக

மக்கள்

மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.

கூர்மையான ஆயுதங்கள்

குவியக் குவிய

நாட்டில் குழப்பம் பெருகுகிறது;

தொழில் நுணுக்கம்

வளர வளர

வஞ்சகப் பொருட்கள்

மிகுதியாகின்றன;

சட்டங்கள் பெருகப் பெருகத்

திருடர்கள் பெருகிறார்கள்.

எனவே

ஞானி கூறுகிறான்:

நான் தலையிடுவதில்லை.

மக்கள் தாமே

திருந்திக் கொள்கிறார்கள்”

– சீன மொழியில் உள்ள தாவோவை தமிழில் இப்படித் தந்திருப்பவர் கவிக்கோ அப்துல்ரகுமான்.

You might also like