அருமை நிழல் :
*
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான காஸ்ட்யூமாக அது இருந்தது.
ஆம்… கௌரவ டாக்டர் பட்டம் பெறுவற்கான உடையுடன் இருந்தார் எம்.ஜி.ஆர்.
சிவப்பு அங்கி, சற்றே சரிந்த கருப்புத் தொப்பி சகிதமான உடையுடன் அவர் சிறப்பு டாக்டர் பட்டம் பெற்றது 1983 ஆம் ஆண்டில்.
பட்டம் கொடுத்தது சென்னைப் பல்கலைக்கழகம். வழங்கப்பட்ட நாள் 1983, செப்டம்பர் 17 ஆம் தேதி.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்த துரைமுருகனுக்குக் கடைசி நேரத்தில் தான் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது தெரியும்.
கலைஞரை முந்திய தின இரவில் தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோது, கலைஞர் சொன்ன பதில்:
“எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்க்காதே. அதிலும் தமிழக முதல்வருக்குத் தரும்போது எதிர்க்க வேண்டாம். அது மட்டுமில்லாமல் நீ அவரால் வளர்க்கப்பட்டவன். எனவே நீ அதனை எதிர்த்துப் பேசக்கூடாது”
குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், ஆளுநர் குரானா போன்றவர்கள் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் – டாக்டர் பட்டமளிப்பு கௌனை அணிந்து கொண்டிருந்தபோது சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
“தம்பி துரைமுருகன் செனட்டில் இருக்கும்போது, எனக்கு டாக்டர் பட்டம் கிடைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி”.
நன்றி: ஜூனியர் விகடன் – 1983 அக்டோபர் இதழ்.
17.12.2021 10 : 50 A.M