உழைத்திட வேண்டும் கைகளை நம்பி!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை..

***

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு

(எத்தனை…) 

உயர்ந்தவர் என்ன
தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு

ஒரு வழி நடந்தார்
உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார்.
தாழ்ந்தவர் ஆவார்

(எத்தனை…) 

கோழியை பாரு
காலையில் விழிக்கும்
குருவியை பாரு
சோம்பலை பழிக்கும்

காக்கையை பாரு
கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு
நாடே சிரிக்கும்…

(எத்தனை…) 

தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்

உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும்
கைகளை நம்பி!

(எத்தனை…) 

– 1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ஆசை முகம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

You might also like