மன வலிமையை நமக்கு அளிக்க வேண்டும்?

1948-ல் மகாத்மா காந்தி மறைவின் போது ஆனந்த விகடன்  ‘மாநில ஜோதி மறைவு’ என்ற தலைப்பில்  தீட்டிய தலையங்கத்தின் ஒரு பகுதி:

“தேச விடுதலையால் மட்டில் இந்திய மக்களுக்கு விமோசனம் ஏற்படாது என்று உணர்ந்து அந்தத் தீர்க்கதரிசி இன்னும் கடமை புரியச் சித்தமாயிருந்தார்.

நூற்றி இருபந்தைந்து வயது வரை ஜீவித்திருந்து வழிகாட்டவே விரும்பினார் என்றால், அது ஆண்டவன் அவருக்கு இட்ட கட்டளையாகும்.

அந்தத் தெய்வீகக் கட்டளையைத் தான் அந்த மராட்டிய வாலிபன் நிறைவேறாதபடி செய்து விட்டான்.

டெல்லியிலே, காந்திஜி மீது அந்த மராட்டிய வாலிபன் பலாத்காரத்தைக் கடைப்பிடித்தது எவ்வளவு பாதகமோ, அதைவிட அதிக கொடூரமான பாதகம், அவருடைய தத்துவங்களினின்று பிறழ்ந்து, நாட்டில் சிலர் பலாத்காரத்தில் அமைதியின்மையைத் தூண்டிவிடும் செய்கை.

மகாத்மாவின் உயிர் உடலைத் தாற் நாம் காப்பாற்றத் தவறினோமென்றாலும், அவருடைய உண்மை உயிராகிய தத்துவங்களையாவது காப்பாற்றுவதற்கு வேண்டிய மன வலிமையை நமக்கு அளிக்குமாறு, தெய்வ வடிவாயுள்ள அருமைத் தந்தை காந்திஜியை கைகூப்பி வணங்குகிறோம்.”

தலையங்கத்துடன் “ஒற்றுமையாக இருங்கள்.. என் ஆத்மா சாந்தி அடையும்” என்கிற வாசகங்களுடன் அன்று வெளியான கார்ட்டூனுக்கு  இன்றும் உயிர் இருக்கிறது.

நன்றி: ஆனந்தவிகடன்

*

You might also like