மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்!

– உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

மூளை வளர்ச்சியற்ற மாற்றுத் திறனாளியான ஜீஷா கோஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “கொல்கத்தாவிலிருந்து கோவா மாநிலம் பனாஜியில் நடந்த மாநாட்டுக்கு ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானத்தில் ஜீஷா கோஷ் செல்ல இருந்தார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அவரது செயற்கை உறுப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரால் விமானத்தில் பயணிக்க முடியவில்லை.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “மாற்றுத் திறனாளிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், அவர்களின் கவுரவம் பாதிக்கப்படும்படி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக மாற்றுத் திறனாளிகளிடம் செயற்கை உறுப்புகளை அகற்றும்படி கூறக் கூடாது” என உத்தரவிட்டனர்.

You might also like