“எமது அமைதிக்கான தத்துவமும் அணுகுமுறையும் மாறுபட்டன. நாங்கள் தனிமனிதனைச் சீர்திருத்துவதன் மூலம் சமுதாயத்தை சீர்படுத்துதல் என்ற கருத்தை நம்புகிறோம்.
தனி மனிதன் மனதில் எழும் வன்முறை வெறியை அடக்கிவிட்டால் போருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். தனிநபர் வெறுப்பு, பகையின் முதிர்ச்சியே போர், ஆயுதக் குறைப்பு மூலமாகப் போரை நிறுத்திவிட முடியாது.
மனிதர்களின் தேவையை செயற்கையாக வளர்த்து, அதை மையபடுத்தபட்ட பெரிய உற்பத்தி முறைகளால் ஈடு செய்யப் பார்க்கிறோம்.
இதனால் பேராசையும், பொறாமையும் பகையும் தான் வளர்கின்றன. இதுவே தேசங்கள் இடையேயான பகையாக, போராக வளர்கிறது.
நிலையான சமாதானமே காந்திய முயற்சி. இது நமது பொருளாதார சிந்தனையில் மாற்றத்தை வலியுறுத்துகிறது.”
– ஜே.சி. குமரப்பா