டெல்லி மாநாட்டில் காயத்திரி விக்கிரமசிங்க.
இந்தியக் கலாசாரம் மற்றும் ஜனநாயகம் குறித்து தற்போது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் மகாநாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்திரி விக்கிரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.
பூட்டான், சுவிடன் தன்சானியா, ஸ்ரீலங்கா, மலேசியா, உஸ்பகிஸ் தான், போலந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த 25 இளம் அரசியல் பிரமுகர்கள் இந்த மகா நாட்டில் கலந்து கொள்கின்றனர்.
75 ஆண்டு கால சுதந்திர இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்த மகாநாடு விரிவாக ஆராய்கிறது. இந்திய நாகரீகத்தின் நீண்டகால பயணம் பற்றியும் இந்திய ஜனநாயக பண்புகள் குறித்தும் ஆய்வுரைகள் இந்த மகா நாட்டில் உரைகள் நிகழ்த்தப்பட உள்ளது.
இந்திய விளிம்பு நிலை மக்கள் பற்றியும் பெண்களை வலிமை மிக்கவர்களாக மாற்றுவது பற்றியும் இந்தியாவின் உயர் நிலை பேராசிரியர்களும் சிரேஷ்ட அமைச்சர்களும் இந்த மகாநாட்டில் உரை நிகழ்த்துகின்றனர்.
காயத்திரி விக்கிரமசிங்க மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான குவாத லூப் (ப்ரான்ஸ்) சர்வதேச இளைஞர் மகா நாட்டில் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிறப்பு விருதை பெற்றவர்.
இந்திய வம்சாவழி மக்கள் மகாசபையின் (கோபியோ) பல்வேறு சர்வதேச மகா நாடுகளி லும் கலந்து கொண்டவர். வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கான பிரவாசி பாரதி திவாஸ்’ எனப்படும் பல்வேறு மாநாடுகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர்.
முன்னாள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன்துறை அமைச்சர் வயலார் ரவியின் அழைப்பின் பேரில் ‘இந்தியாவை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.