மனம் என்கிற மந்திரக்கோல்…
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
என்றார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்…
மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை, நினைவாற்றல், போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) ஆகும்.
காதல், கவலை, களிப்பு, இன்பம், துன்பம், தன்னம்பிக்கை, அவநம்பிக்கை, மகிழ்ச்சி, மனநிறைவு போன்ற உணர்வு நிலைகள் சார்ந்த அம்சங்களின் தொகுப்பே மனம் எனப்படுகிறது.
சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல தத்துவஞானிகள் இதுபற்றிக் தெளிவாக கூறியுள்ளனர்.
மேலும் “மனம் போல் வாழ்வு” என்று வாழ்த்துவது நம் பண்பாடு.
மனம் என்றால் என்ன? மனம் எங்கே உள்ளது? என்பதற்கு விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் பல விளக்கங்கள் இருப்பினும் அம்மனதின் இருப்பிடத்தை யாராலும் கண்டறிய முடியாது.
பகுத்தறிவுள்ள மனம், மனிதனுக்கு வழங்கப்பட்ட வரம். அதனால் தான் அனைத்து சக்திகளும் பிறக்குமிடம் மனமாகும். மனம் செம்மையுற வேண்டுமெனில் தகுந்த வழிகாட்டுதலும், வழிநடத்துதலும் அவசியம்.
நேற்றைய தினம் போய் விட்டது. நாளைய தினம் நிச்சயமற்றது. இன்றைய தினத்தில் மனமகிழ்வோடு வாழ சக்தி வேண்டும்.
மனதின் சக்திகள் நல்லவற்றை நாடும் சக்தி, தீயவற்றை தேடும் சக்தி என்று இரு வகையாக பிரிக்கப்படுகிறது. உள்ளத்தின் உயர் சக்தி நல்லவற்றையே நாடும். உள்ளம் செம்மையோடு இருந்தால், உடல் வலுப்பெறும்.
உடல்நலமோடு இருந்தால், உள்ளம் வளமோடு இருக்கும். இதையே ‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’ என திருமூலர் திருமந்திரத்தில் வலியுறுத்துகிறார்.
மனம் நல்லவற்றை நாடும் போது தடைகள் தானே வரும். உறுதியான வேருடைய மரங்கள் சாய்க்கப்பட்டாலும், உயர்ந்து நிற்கும் மலைகள் தகர்க்கப்பட்டாலும், உயர்ந்த குறிக்கோளுடைய வலிமையுள்ள மனம் மட்டும் என்றும் சிதைக்கப்படுவதில்லை.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆங்கிலேய ஆட்சியின் போது சுதந்திர வேட்கையுடன் விடாது இடையூறுகள் தொடரினும் வலிமையோடு, நெஞ்சில் உறுதியோடு, நல்லவற்றை நாடும் உயர் சக்தியாக என்றும் அழியாத, மனதை விட்டு நீங்காத பல புரட்சிகரமான பாடல்களை பாடினார் பாரதியார்.
மனநலம் உடையோரே நல்லவற்றை நாடுவர். மனநலம் என்பது தனக்கும், மற்றவர்களுக்கும், நிறைவான இசைவான செயற்பாட்டை அளிப்பது என மனநல வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம் ஆடு பாடு ஆனந்தமா
– என்கிறார் கவிஞர் வாலி அவர்கள்…
அந்தவகையில் தோல்வியாளர்கள் கடந்த கால கசப்பான சம்பங்களை மட்டுமே எண்ணி கவலைப் படுகிறார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் வெற்றியாளர்களோ எதிர் காலத்தில் நடக்க இருக்கும் இனிப்பான சம்பவங்களை எண்ணி நன்கு திட்டமிடுகிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். கனவை நனவாக்குகிறார்கள். நினைத்ததை நடத்தி முடிக்கிறார்கள்.!!!
உங்கள் மனம் சஞ்சலப்படும்போது என்னடா வாழ்க்கை இதுவென்று வேதனை கொள்ளும் போது, வாழ்க்கையே வேண்டாமென்று விரக்தியின் உச்சத்திற்கு செல்லும் போது சோதனைகளை சாதனைகளாக்கி வாழ்வில் உச்சத்தை தொட்ட வரலாறு படைத்த சாதனையாளர்களின் வாழ்க்கை தடத்தை அவர்கள் கடந்து சென்ற கரடு முரடான பாதையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…
அப்படி அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால் நிச்சயம் உங்களது மனமானது தடுமாற்றம் அடையாது.
– நன்றி முகநூல் பதிவு.
(அடுத்து வருவது தேவையில்லை எனில் நீக்கிவிடவும்)
மேலும் மனதிற்கு நம்பிக்கையூட்டும், புத்துணர்ச்சி தரும் திரை இசைப்பாடல்களை கேளுங்கள்,
அந்த வரிசையில் மனம் பற்றி தலைச்சிறந்த பாடல்களில் வித்தக கவிஞர் பா.விஜய் அவர்கள் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே என்கிற பாடலும் ஒன்று
அருமையான
அப்பாடலின் வரிகள் உங்கள் பார்வைக்கு..
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும்…
நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும்
கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா..
ஒரு முடிவிருந்தால்.. அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே
நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும்… நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு.!!!
உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளல் தொடரும்…