வாழ வழிகள் தருவான் இறைவன்!

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா

எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

(செல்லக்கிளிகளாம்)

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்

பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

(செல்லக்கிளிகளாம்)

– 1970-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘எங்க மாமா‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கண்ணதாசன்.

You might also like