கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்!

கவுண்டமணி ரொம்பவும் ரசித்து நடித்தது ‘நடிகன்’ படத்தில் தான்.

அதில் இவருக்கு மிகவும் பிடித்த காட்சி – சத்யராஜை பிளாக் மெயில் பண்ணி, முட்டைப் பிரியாணி சாப்பிடும் காட்சியில் சிரிப்பை அடக்க முடியவில்லையாம்.

“நான் மிகவும் தம் பிடித்து சீரியஸாகப் பேசப் பார்ப்பேன்.

சத்யராஜ் குபுக்கென்று சிரித்து விடுவார்.

பிறகு அவர் சீரியஸாகி, நான் சிரித்து விடுவேன்.

வெகுநேரம் மல்லுக்கட்டி ஒரு வழியாக இருவரும் சீரியஸாகும் போது, டைரக்டர் வாசு சிரித்து விடுவார்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் கவுண்டமணி.

இப்போதும் பி.வாசு இயக்கிய ‘நடிகன்’ படத்தைப் பார்த்தால், அந்தக் காட்சியைக் கவனித்துப் பாருங்கள். கவுண்டமணியின் கஷ்டம் புரியும்.

vels
You might also like