1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டனில் உள்ள தேசியப் பத்திரிகைச் சங்கம் நேருவை உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தது.
அங்கே 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நேரு பதிலளித்தார் என்றும் சில கேள்விகளுக்கு நகைச்சுவை ததும்பும் பதிலை அளித்தார் என்றும் அமெரிக்கன் ரிப்போர்ட்டர் அனுபந்தம் குறிப்பிடுகிறது.
இதைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் நாள் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார். அமெரிக்க பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
(படங்கள்: அமெரிக்கன் ரிப்போட்டர் அனுபந்தம், ஜனவரி 26, 1962)
நன்றி: ரோஜா முத்தையா ஆய்வு தூலகம்