– இயக்குநர் ஞான ராஜசேகரன்
பாரதி, பெரியார், ராமானுஜன் என்று பலருடைய வாழ்வு சார்ந்த படங்களை எடுத்திருக்கிற இயக்குநரான ஞான.ராஜசேகரன் அண்மையில் வெளிவந்த ‘தலைவி’ படத்தைப் பற்றி ராணி வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதில் சொல்லியிருக்கிறார்.
“பயோகிராபி என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களைத் திரையில் காட்டுவது அல்ல. ஜெயலலிதாவுடைய பிடிவாதத்திற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர் மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அது ஏன் என்று தேட வேண்டும்.
அதைத் தேடிப் பதிவு செய்வது தான் ஒரு பயோகிராபியின் வேலை. ‘தலைவி’ படம் ஏதோ ரிக்கார்டு டான்ஸ் மாதிரி இருந்தது.
‘இருவர்’ படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதில் எம்.ஜி.ஆராக மோகன்லால் நடித்திருப்பார். தோற்றப் பொருத்தம் வித்தியாசம் இருந்தாலும், நடிப்பில் எம்.ஜி.ஆரின் உணர்வுகளைக் கொண்டு வந்திருந்தார் மோகன்லால்.”
*
நன்றி: ராணி 31.10.2021 இதழ்