எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகம்!

எளியோரை தாழ்த்தி
வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா

பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வுபறி போவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

(எளியோரை…)

சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி
உனைக் காணவே என் உளம் நாடுதே
பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை
சிறைக்காவல் இங்கே தடை போடுதே

(எளியோரை…)

-1958-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கு.ச.கிருஷ்ணமூர்த்தி.

You might also like