பிழைக்க வேண்டுமே…!

‘கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை.

மருத்துவரிடம் போனார். அவர் மருந்து எழுதிக் கொடுத்தார்.

அவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் கல்கி.

வீட்டுக்கு வந்ததும் மருந்தைச் சாக்கடையில் கொட்டி விட்டார்.

இதைப் பார்த்த அவருடைய மனைவி ருக்மணி, “மருந்து சாப்பிடுவது இல்லை என்றால், ஏன் டாக்டரிடம் போனீர்கள்?” என்று கோபப்பட்டார்.

“டாக்டர் பிழைக்க வேண்டுமே.. அதுக்குத்தான்” என்றார் கல்கி.

“சரி, பிறகு ஏன் மருந்து வாங்கினீர்கள்?”

“மருந்துக்கடைக்காரர் பிழைக்க வேண்டும் அல்லவா?”

“பிறகு ஏற் வாங்கிய மருந்தைச் சாக்கடையில் கொட்டீனீர்கள்?”

“நான் பிழைக்க வேண்டும் அல்லவா?” என்று கூறிச் சிரித்தார் கல்கி.

*

You might also like