பரஸ்பரம் மதிக்கும் பண்பு!

தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி.

முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை. அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது.

அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன் பெரியாரின் வேன் வந்து நின்றது. வந்த பெரியாரை கைபிடித்து அழைத்துச் சென்றார் கல்கி.

“காலையில் கல்யாணத்திற்கு அய்யா வரலையே… உடம்புக்கு சரியில்லையோ…”

“அதெல்லாம் ஒன்னுமில்லை… நல்லாத்தான் இருந்தேன்.”

“அப்புறம் ஏன் வரலை?” என்றார் கல்கி.

“வேறொண்ணுமில்லை.. காலையில வந்தேன்னு வையுங்க. என்னயக் கூட்டிட்டுப்போயி முன்னால உட்கார வெச்சிடுவீங்க. நான் கருப்புச் சட்டையோட இருக்கறதப் பார்த்து ஒங்க வீட்டுப் பொண்ணுக முகம் சுளிக்கலாம்.

கல்யாணம் நடக்கும் போது கருப்புச் சட்டை போட்டு வந்திருக்கிறேன்னு வருத்தப்படலாம். அதான் இப்ப வந்திருக்கேன்.” என்று பெரியார் சொல்ல, நெகிழ்ந்து போனார் கல்கி.

புதுமணத் தம்பதிகளுக்கு விபூதி, குங்குமம் வைத்து வாழ்த்த பெரியாரை கல்கி கேட்டுக் கொண்டார்.

பெரியார் மறுக்காமல் செய்தார்.

இதை கல்கி போட்டோகிராபர் படமாக்கிவிட்டார்.

இந்தப் படத்தை கல்கி இதழின் அட்டைப்படத்தில் போட கல்கி இதழின் ஆசிரியர் கல்கியிடம் அனுமதி கேட்டார். கல்கி மறுத்துவிட்டார்.

தம் விருப்பத்தை நிறைவேற்றிய பெரியாரை விமர்சனத்திற்கு ஆளாக்க கல்கி விரும்பவில்லை.

எதிரெதிர் கொள்கை.
விருப்பத்தை மதிக்கும் பண்பு.
நட்பில் விட்டுக்கொடுக்காமை.

இப்படி இருந்தவர்கள்தான் சமூகத்தின் சரித்திரப் பதிவுகள்!

நன்றி: முகநூல் பதிவு

You might also like