கொரோனாவைக் கண்டறிய கையடக்கக் கருவி!

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் கல்வி நிலையத்தின் பாத்ஷோத் ஹெல்த்கேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம்  கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கையடக்க ஆன்டிபாடி கருவியை உருவாக்கியுள்ளது.

ஆன்டிபாடி டெஸ்ட் என்பது ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது எனக் கண்டறியப் பயன்படுகிறது.

கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரையில் ஆர்டிபிசிஆர், ஆன்டிபாடி என்ற இரு வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஆன்டிபாடி சோதனையில், வைரஸ் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை அறிய ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

நோய்த்தொற்றைக் காட்டாத அறிகுறிகளற்ற நபர்களிடம் ஆன்டிபாடிகள் இருப்பதை அந்த பரிசோதனை உதவிசெய்கிறது.

நோய் பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு நோயாளியை இந்த பரிசோதனை செய்தால் அவருடைய நோய் எதிர்ப்பு ஆற்றலின் தன்மையை அறியலாம்.

மக்கள் எல்லோரும் தடுப்பூசி போடவேண்டிய நிலையில், தடுப்பூசி போடுவதற்கு முன்பும் பின்புள்ள உள்ள நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலையை அறிய ஆன்டிபாடி பரிசோதனை உதவியாக இருக்கிறது.

“இந்த பரிசோதனையை ஆய்வுக்கூட அளவில் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பின் உண்மையான மதிப்பை அறியமுடியும். அதற்காகப் பயன்படும் கருவி மிகவும் விலைமதிப்புமிக்கது.

இரண்டாவது பரிசோதனை  மிக எளிமையானது” என்கிறார் ஸ்டார்ட் அப் இணை நிறுவனர் நவகாந்த் பட்.

நோயாளிகளின் உடலில் உள்ள ஆன்டிபாடியின் இருப்பை 5 நிமிடங்களில் சொல்லிவிடும். கடைசியில் பரிசோதனைக் கருவியை இரு பகுதிகளாக உருவாக்கியிருந்தனர். அதில் ஒன்று அனலைசர்.

அது நோயாளியின் ரத்த மாதிரியைப் பற்றி முழுமையான அறிக்கை அளிக்கும். மற்றொன்று விரலின் நுனியில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை அந்தக் கருவிக்குள் செலுத்தும்.

இந்தக் கருவி நோயாளியைப் பற்றிய மருத்துவ அறிக்கையை 5 நிமிடங்களில் வழங்கிவிடும். உங்களுடைய மொபைல் போனில் டவுன்லோடு செய்யப்பட்டுவிடும்.

அனலைசர் கருவி ரீசார்ஜ் செய்யப்படும் பேட்டரியில் இயங்குகிறது.

பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கருவியின் தரம் 500 மாதிரிகளால் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், ஆன்டிபாடி கருவிக்கு ஃபரிதாபாத்தில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

  • பா. மகிழ்மதி
You might also like