உலகளவில் மிகச்சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் நடத்தப்படும் இந்த விழாவில், சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.
இந்த ஆண்டு இந்தியா சார்பாக 14 படங்கள் போட்டி போடுகின்றன. அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படமும் உள்ளது.
அந்த போட்டியில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் இதுதான்.
மலையாளத்திலிருது நயட்டு, இந்தியில் சர்தார் உள்ளம் உள்ளிட்ட படங்கள் போட்டியில் உள்ளன.
இயக்குநர் ஷாஜி என்.கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட தேர்வுக் குழு இந்த 14 படங்களையும் பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்வர். இந்தப் படங்கள் கொல்கத்தாவில் உள்ள திரையரங்கில் தேர்வுக் குழு முன்பு பார்வைக்காக திரையிடப்பட உள்ளன.
அந்த ஒரு படம் ‘மண்டேலா’வாக இருக்கும் என நம்புவோமாக.