எம்.ஜி.ஆரைப் பற்றி அவருடன் பழகியவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் மக்கள் திலகத்துடன் கூடவே வாழ்ந்த மனைவி எழுதினால் எப்படி இருக்கும்?
அப்படித் தான் தன்னுடைய கணவரான எம்.ஜி.ஆரைப் பற்றி ஆத்மார்த்தமான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர்.
அதை அபூர்வமான புகைப்படங்களுடன் பதிப்பித்துத் தந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்- ஜானகி பேரனான முனைவர் குமார் ராஜேந்திரன்.
திரைப்பட ஸ்டில்ஸ் துவங்கி அரசியல் வரை மிக அபூர்வமான புகைப்படங்கள், அருமையான தகவல்கள் என்று 150 பக்கங்கள் அடங்கிய நூலின் தலைப்பு ‘எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்’.
தாய் பதிப்பக வெளியீடான இந்தப் புத்தகம் விலையேதுமின்றிக் கிடைப்பது சிறப்பு.
எம்.ஜி.ஆரை நேசிப்பவர்களுக்கு இது ஒரு அழகான பொக்கிஷம்.
*** இந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பைத் தொட்டு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.