கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1931)
தன் வாழ்நாளில் தாமஸ் ஆல்வா எடிசன் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை -1300
மின்விளக்கு, கிராமஃபோன், ஜெனரேட்டர், கேமரா, கார்பன் டிரான்ஸ்மிட்டர், போனோகிராப், மின்சார ரயில், சேம மின்கலம், இரும்புத்தாது பிரித்தெடுக்கும் முறை, கான்கிரிட் தயாரிக்கும் முறை என அவரது கண்டுபிடிப்புகள் ஏராளம்.
வரலாற்றில் வேறு எந்த கண்டுபிடிப்பாளரும் கிட்டகூட நெருங்க முடியாத எண்ணிக்கை இது.
அப்படிப்பட்ட எடிசன் சொன்னவை சில…
ஒரு சதவிகித ஊக்கத்தை முதலீடு செய்து, 99% வியர்வையை சிந்த நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கு அந்த வானம் நிச்சயம் வசப்படும்.
வாழ்க்கையை அழிக்கக்கூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன். மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்.
எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை.
என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டது உண்டு, ஆனால், நான் ஒருமுறை கூட முயற்சியை கைவிடவில்லை.
என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன். காரணம், நான் நூறு வெற்றிகளைப் பார்த்தவன் அல்ல, ஆயிரம் தோல்விகளைப் பார்த்தவன்.
நூல் நிலையம் இல்லாத வீடு உயிர் இல்லாத உணவு போன்றது.
வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை. மனிதன் ஓய்வு நேரங்களில் நூல்களைப் படித்து அறிவ பெருக்க வேண்டும். தொழில் செய்து ஓய்ந்திருக்கும் போது அவனது உள்ளத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது நூல்களே.