அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்குச் சென்ற திருமதி சசிகலா அவர்கள், அங்குள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு அதிமுக கொடியை ஏற்றி வைத்த சசிகலா, பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றி ஜானகி அம்மையார் எழுதிய ‘எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்’ என்ற நூலையும் வெளியிட்டார்.
ஜானகி அம்மையாரின் சகோதரர் திரு. நாராயணன் என்கிற மணியின் பேரன் வழக்கறிஞர் முனைவர் திரு குமார் ராஜேந்திரன் தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்த நூல் இது.
பின்னர் எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்கள், அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள், நினைவுப் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றையும் சசிகலா அவர்கள் பார்வையிட்டார்.