தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடரும் நிலையில், மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வீட்டை விட்டு வெளியுலகுக்கு ஒருவர் வந்து, இருமும்போது அதே திசையில் மெல்லிய தென்றல் காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும்.

வீட்டுக்கு வெளியே வந்து விட்டாலே முகக் கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சில்லென்று காற்று வீசுகிற சூழலில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.” என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

You might also like