இழந்ததை எண்ணி கலங்காதே!

நினைவில் நிற்கும் வரிகள்:

****

உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்

போவதைக் கண்டு கலங்காமல்
வருவதைக் கண்டு மயங்காமல்
மெய் தளராமல் கை நடுங்காமல்
உண்மையை பொய்யை உணர்ந்தவனே

                         (உலகத்தை) 

வாழ்க்கை என்பது நாடகமே
வந்து போனவர் ஆயிரமே
கொண்டு சென்றவர் யாரும் இல்லை
கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை
அந்த நாடகம் இன்னும் முடியவில்லை
மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை

                       (உலகத்தை) 

வாழ்வை அறிந்தவன் சம்சாரி
வாழப் பயந்தவன் சன்னியாசி
கண்ணீர் வடிப்பவன் மூடனடா
காலத்தை வென்றவன் வீரனடா
நல் இன்பத்தைத் தேடி உறவாடு
நீ எழுந்திடு மனிதா விளையாடு

                       (உலகத்தை) 

1960-ம் ஆண்டு வெளிவந்த ‘கவலை இல்லா மனிதன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

You might also like