இன்றைய வாழ்வியல் முறையில் உடல்நலம், மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
நம் மனநலம் என்பது, நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் சொல்லலாம். அப்படியானால் உணவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.
எப்படி உணவு நம்முடைய மனநலத்தை பாதிக்கும்? உணவுக்கும் மனநலத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இரவும் பகலும் நம் உடலுக்குள் நடக்கும் இயக்கங்களை நமது மூளை கட்டுப்படுத்துகிறது. மூளை செயல்படுவதற்கான ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது.
ஆகவே, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மனநலத்துக்கு மிகவும் முக்கியம்.
உணவுக்கும் மனநலத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
உணவுப் பழக்கங்கள் மனநலத்தை பாதிக்கின்றவா?
எப்படி பாதிக்கின்றன?
உணவு எப்படி மனநலனோடு தொடர்புபடுகிறது?
உணவும் மனநலனும் குறித்து நிபுணர்களின் விளக்கங்கள்:
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் உணர்வுகளை நேரடியாக பாதிக்கும் என்கிறார் மனநல மருத்துவர் கேதார் திலாவே.
“முதலில் மனநலம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனநலனில் மூன்று அம்சங்கள் உண்டு. அவை உணர்வுகள், உளவியல், சமூக நலம் ஆகியன.
பலருக்கு இனிப்புப் பண்டங்கள் சாப்பிடப் பிடிக்கும். வேறு சிலரோ ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
இந்த உணவுக்கும் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இனிப்பான உணவுகள் கொழுப்பை சுரக்கின்றன. அதனால் மூளையில் ஹார்மோன்கள் சுரப்பது அதிகரிக்கிறது.
அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணும்போது கார்டிகோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதற்றம், மன அழுத்தத்தோடு தொடர்புடைய ஒரு ஹார்மோனாகும்.
ஆகவே கொழுப்பான உணவுகள் மூளையை பாதிக்கின்றன. அளவுக்கதிகமாக இனிப்புகள் சாப்பிடும்போது மூளையின் வேதித்தன்மை மாறுகிறது.
இந்த ஹார்மோன் தானாக சுரப்பதில்லை. அளவுக்கதிகமாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும்போது ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
உணவுப் பழக்கங்கள் எப்படி மனநலத்தை பாதிக்கின்றன என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறார்.
உணவு உண்டு முடித்தபின்பு நாம் மது அருந்தும்போதோ புகையிலை பயன்படுத்தும்போதோ மனப்பதற்றம் அதிகரிக்கலாம்.
அளவுக்கதிகமான இனிப்புகள் சாப்பிடுபவர்களுக்கு கவனக்குறைவு நோய் (ADHD) உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம்” எனக் கூறுகிறார் கேதார்.
மருத்துவர் வாணியின் கூற்று.
“உணவுப் பழக்கமும் மனநலனும் பின்னிப் பிணைந்தவை. உடலுக்கு சத்தான சரிவிகித உணவு தேவை. அது மனநலனோடும் தொடர்பு படுத்தப்படுகிறது. மூளைக்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது.
சரிவிகித உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றல் மூளையை நேர்மறையாகச் சிந்திக்க வைக்கிறது, மூளையின் செயல்திறன் இதனால் அதிகரிக்கிறது” என்கிறார்.
“மனநலம் என்பது மூளை, வயிறு, செரிமான உறுப்புகளோடு தொடர்புடையது. நம் உணவோடும் தொடர்புடையது” என்று கூறுகிறார் மருத்துவர் அமுதா.
நல்ல மனநலம் வேண்டுமானால் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்?
மூளை நலத்துடன் இயங்கவேண்டுமானால் என்னென்ன உணவுகளைச் சாப்பிடவேண்டும்?
மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடவேண்டும்?
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துக்கள்.
ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் செந்தில்குமாரின் கருத்து.
“நல்ல உணவு இருந்தால் மூளை அமைதியாக இருக்கும், பதற்றம் குறையும். மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களின் சுரப்பைக் குறைப்பதற்கான உணவுகளை அவர் பட்டியலிடுகிறார்.
“வைட்டமின் சி உள்ள எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, குடை மிளகாய், பெர்ரி வகை பழங்கள் போன்றவை ரத்தத்தில் கார்டிசோல் ஹார்மோன் அளவைக் குறைக்கும்.
பெர்ரி பழங்கள் அழுத்தத்தைக் குறைக்கும். பாலில் உள்ள புரதச்சத்துகள் ரத்த அழுத்தத்தையும் இது தொடர்பான ஹார்மோன்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
மாவுச்சத்து உள்ள பொருட்களைச் சாப்பிடும்போது மூளையில் செரடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.
இதனால் உணர்வுகள் மகிழ்ச்சியானவையாக மாறுகின்றன. வைட்டமின் பி உள்ள உணவுப் பொருட்கள் அழுத்தத்தைக் குறைக்கின்றன.
உடலில் வைட்டமின் டி சத்து குறையும்போது மனச்சோர்வு ஏற்படும். வைட்டமின் டி அளவு சீராக இருக்கும்போது மனச் சோர்வும் கட்டுக்குள் வரும்.
உடல் எடையைக் குறைப்பதற்காக டயட் பின்பற்றினால் அது மனநலனைப் பாதிக்குமா? என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.
“உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் கடுமையான டயட்டைப் பின்பற்றுவார்கள். எதிர்பார்த்த அளவுக்கு எடை குறையவில்லை என்றால் தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொள்வார்கள்.
இது மன அழுத்தம் தரும், மனநலத்தை பாதிக்கும். குறிப்பிட்ட எடையில், அளவில் உடல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். அது அவர்களின் மனநலத்தை பாதிக்கிறது.”
“நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது அதிகமாக சாப்பிடவேண்டும் போலத் தோன்றும். மன அழுத்தம் இருக்கும்போது அதிகம் சாப்பிடுகிறோம்.
சிலர் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக அதிகமான இனிப்புகளும் துரித உணவுகளும் சாப்பிடுவார்கள்.
அது தற்காலிகமான ஓர் ஆறுதலைத் தரும் என்றாலும் அது நல்லதல்ல. நல்ல உணவு சாப்பிடும்போது மனதில் நல்ல எண்ணங்கள் வரும். அதுவே மனநலத்திற்கு ஆரோக்கியமான உணவு.” என்கிறார் மருத்துவர் சிவராமன்.
– நன்றி: முகநூல் பதிவு.