பள்ளிப் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்!

– பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள் தொடங்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, வருகிற 1-ம் தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் தொடங்கப்பட்டால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பதிலளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை.

பொதுத்தேர்வுக்கு முன்னதாக டிசம்பர் மாதம் ஒரு தேர்வு நடத்தப்படும். திட்டமிட்டபடி நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’’ என்றார்.

You might also like