திசைதோறும் இசை பாடும் தாய்நாடே!

நினைவில் நிற்கும் வரிகள்:

விந்தியம் குமரியிடை
விளங்கும் திருநாடே 
வேலேந்தும் மூவேந்தர்
ஆண்டிருந்த தென்னாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே

            (எங்கள்…) 
இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விளங்கும் செந்தமிழ் நாடே
           (எங்கள்…) 
சரித்திரம் பாடும் காவேரி
இளம் தளிர்க்கொடி போலே ஓடுகிறாள்
சங்கம் வளர்த்த மதுரையிலே
           (எங்கள்…) 
விழிகளைப் போலே குமரியின் மேலே
மீன் மகள் துள்ளி ஆடுகிறாள்
விளையாடும் வைகை அழியாத பொய்கை
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே
           (எங்கள்…) 
சிங்களத் தீவின் கடற்கரையை
எங்கள் செந்தமிழ்த் தோழர்
அழகு செய்தார்
எகிப்திய நாட்டின் நதிக்கரையில்
எங்கள் இளந்தமிழ் வீரர்
பவனி வந்தார்

வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின்
வேல்விழி மகளை மணமுடித்தான்
விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே
           (எங்கள்…) 

1958-ம் ஆண்டு வெளிவந்த ‘மாலையிட்ட மங்கை‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

You might also like