திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது – 65
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உரைச் சேர்ந்தவர். தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் பிறைசூடன். 5000-த்திற்கும் பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார்.
1985ல் வெளியான ‘சிறை’ படத்தில் இடம்பெற்ற ‘ராசாத்தி… ரோசாப்பூ’ பாடல் மூலம் அறிமுகமானார் பிறைசூடன். அதைத் தொடர்ந்து ‘செம்பருத்தி’ திரைப்படத்தில் “நடந்தால் இரண்டடி…, ‘கேப்டன் பிரபாகரன்’ “படத்தில் ஆட்டமா தேரோட்டமா” போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதினார் பிறைசூடன்.
தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்ற இவர், தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் கலைச்செல்வம் விருதையும், கபிலர் விருதையும் பெற்றுள்ளார்.
அண்மைக் காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் பிறைசூடன் நெசப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.