நினைவில் நிற்கும் வரிகள்:
***
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
(இதுதான்)
உதைத்தவன் காலை முத்தமிடும்
உத்தமர் வாழ்வை கொத்திவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும்
(இதுதான்)
உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித்தரும்
(இதுதான்)
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
வீணே சிறையில் பூட்டிவிடும்
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை
புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்
(இதுதான்)
- 1956-ம் ஆண்டு வெளிவந்த ‘பாசவலை‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.