– நிர்மலா சீதாராமன்
ராயப்பூரில் பேசும்போது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் “கொள்ளை என்கிற விஷயம் காங்கிரசின் மனதில் இருந்து அகலாது. அது அவர்களுடைய மரபணுவில் கலந்துள்ளது” என்று பேசியிருக்கிறார்.
நிதியமைச்சரின் இந்தப் பேச்சுப்படி பார்த்தால், குஜராத்தில் பா.ஜ.க உயர்த்திப் பிடித்துச் சிலை அமைத்திருக்கிற சர்தார் வல்லபாய் பட்டேல் எதில் உருவாகி வந்தவர்? காங்கிரசிலிருந்து தானே! பிறந்த நாட்களிலும், நினைவு நாட்களிலும் இதே பா.ஜ.க மரியாதை செலுத்தும் காந்தி எதிலிருந்து உருவானவர்?
காங்கிரசிலிருந்து விலகித் தற்போது பா.ஜ.க.வில் ஐக்கியமாகி இருக்கும் அவ்வளவு பேரின் மரபணுவையும் நிதியமைச்சர் பாணியில் சந்தேகிக்க வேண்டுமா?