நிலைமை உயரும்போது பணிவு வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில்
இன்பம் இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் – இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில் 
எல்லா நன்மையும் உண்டாகும்

                       (ஆறு மனமே ஆறு)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் –
நிலை உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் – இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

                      (ஆறு மனமே ஆறு)

ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் – இதில்
மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

                     (ஆறு மனமே ஆறு)

– 1964-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கண்ணதாசன்

You might also like