கண்ணியம் தவறாதே…!

கத்தியைத் தீட்டாதே
உந்தன் புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே
அதிலே திறமையைக் காட்டு
(கத்தியை)

ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு

உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு
(கத்தியை)

மன்னிக்கத் தெரிந்த மனிதனின்
உள்ளம் மாணிக்க கோயிலப்பா
இதை மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா
(கத்தியை)

இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம்

இதை எண்ணிப் பாரு தெளிவாகும்
எண்ணிப் பாரு தெளிவாகும்
(கத்தியை)

– 1965-ம் ஆண்டு வெளிவந்த  ‘விளக்கேற்றியவள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் ஆலங்குடி சோமு.

https://www.youtube.com/watch?v=qOUdgynEMKI

You might also like