எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே
அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே
மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு
கருணைக்குத்தான் கடவுளென்று
மற்றொரு பேரு
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
நிழல் கொடுக்க தந்தை என்ற
மரம் இருந்தது
நேற்று வந்த காற்றில் அந்த
மரம் விழுந்தது
கனி சுமந்த பூங்கொடியோ
கண் கலங்குது
இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது
அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
– 1974-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘சிவகாமியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.