‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஒரு காட்சியில் செக்கிழுக்கும் செம்மலை, சிறை அதிகாரி ஒருவர் அடித்துக் கீழே தள்ளி மிதிப்பது போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.
செம்மலாக சிவாஜி நடிக்கத் தயாராக இருக்க.. அவரைக் கீழே தள்ளி நடிக்க வேண்டிய சிறை அதிகாரி வேடத்தில் நடித்தார் வி.பி.மணி என்ற நடிகர்.
“டேக் ரெடி ஆக்சன்” என்று சொல்லியும், வி.பி.மணி தயங்கினார்.
என்னவென்று கேட்க “நான் எப்படி சாரை மிதிக்கிறது?” என்று மெல்லச் சொல்லியிருக்கிறார்.
இதைக் கண்ட சிவாஜி “இந்தா மணி, நீ சிறை அதிகாரி. நான் கைதி. அது தான் சினிமா. சிவாஜி எல்லாம் வெளியிலே வைச்சுக்க” என்று உரிமையாகச் சமாதானம் செய்து தன்னை மிதிக்க வைத்தார்.
அந்தக் காட்சி முடிந்ததும் வி.பி.மணி அழுது கொண்டே சிவாஜியின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்”
– மு.ஞா.சே. இன்பா எழுதிய ’சிவாஜி ஆளுமை- பாகம் -3’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.