ஆதரவு அளிக்கிற கட்சிகள் லிஸ்ட்: புது தேர்தல் டிரெண்ட்!

தேர்தல் பக்கங்கள்:

ஒரிஜினல் பிக்பாஸ் தனியாகப் போட்டியிட்டாலும் கூட, தற்போது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தான் பிக்பாஸ் மனப்பான்மையுடன் இருக்கின்றன. கூட்டணிக் கட்சிகளிடம் அவ்வளவு கறாராக இருக்கின்றன.

கூட்டணிப் படிக்கட்டில் முன்பு உயர்ந்திருந்தவர்கள் இப்போது படியிறங்கி வந்திருக்கிறார்கள்.

சிலருக்கு ஆறு. சிலருக்குத் தலா ஒன்று என்றெல்லாம் படு ஸ்ட்ரிக்ட். இதாவது பரவாயில்லை, இதில் ஒரு தொகுதி கொடுக்கவும் தயங்கிறவர்களை ஆதரவு தெரிவிக்கிற லிஸ்டில் சேர்த்து விட்டார்கள்.

என்ன ஒரு பெருந்தன்மை.

ஆதரவு தருகிறவர்களின் வழியாக வரும் வாக்குகள் வேண்டும். ஆனால் – தொகுதி என்றால் ‘நோ’.

அப்படித்தான் கருணாஸூக்கு சென்ற தேர்தலில் கிடைத்த தொகுதி கூட இந்த முறை கிடைக்கவில்லை.

தனித்துப் போட்டியிடுவதாகச் சொன்னவர் இப்போது தி.மு.க.வுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

இதேமாதிரி அ.தி.மு.க.விலும் தனியாக ஒரு ஆதரவு தரும் உதிரிக் கட்சிகள் என்று ஒரு லிஸ்ட்டைக் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

அடுத்து நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலோ அல்லது ஒருவேளை மேலவை அமைக்கப்பட்டால், அதில் இடம் கொடுக்கிறோம் என்று கனவுகளை உருவாக்கி அதில் வரிசையாக நாற்காலிகளைப் போட்டுவிட்டார்கள்.

தமிழகமே மிகப்பெரிய ‘பிக்பாஸ்’ அரங்கம் மாதிரி ஆகிவிட்டது. பங்கேற்பார்களாக பலர் இருக்கிறார்கள். ‘டாஸ்க்’ மாதிரி ஒவ்வொரும் விதவிதமான வாக்குறுதிகளை வழிமொழிகிறார்கள்.

அதிலும் “என் சிலேட்டைப் பார்த்து காப்பி அடித்துவிட்டதாக”ப் புகார்களும் வருகின்றன. யாரை இருக்கச் செய்வது? யாரை வெளியேற்றுவது?

இப்போதைக்கு அமைதியாக – ஏப்ரல் 6ம் தேதிக்குக் காத்திருக்கிறார்கள் பெருங்கூட்டமான ‘பிக்பாஸ்’ வாக்காளர்கள்.

09.03.2021  03 : 33 P.M

You might also like