அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

அன்பு மலர்களே… நம்பி இருங்களே…
நாளை நமதே… இந்த நாளும் நமதே…
தருமம் உலகிலே… 
இருக்கும் வரையிலே… 
நாளை நமதே… இந்த நாளும் நமதே…

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே… நாளை நமதே… 

                                                         (நாளை நமதே…)

பாசம் என்னும் நூல் வழி வந்த 
வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கைப் பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

                                                         (நாளை நமதே…)

வீடு என்னும் கோயிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக
வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாக்கிடும் இதயம் என்றும் மாறாது

                                                         (நாளை நமதே…)

  • 1974-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘நாளை நமதே‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
You might also like