தலையணையைத் தலையில் சுமந்த தலைவர்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-26

மக்கள் திலகம் அவர்களுக்குச் சீட்டு விளையாடத் தெரியும் என்பது அநேகருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இவரோடு சீட்டு விளையாட அமர்ந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தோற்றுப் போய் விடுவார்கள்.

சீட்டாட்டத்தில் எதெல்லாம் அவருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரோடு விளையாடுகிறவர்கள் தோற்றுப் போவார்கள் என்பது மட்டும் தெரியும். கேரம், செஸ் எல்லாவற்றிலும் இவர் தான் முன்னணி.

இந்தத் தோட்டத்தில் முதல் மாடியில் தான் அவர் எப்போதாவது சீட்டாடுவது உண்டு. அநேக சூழ்நிலைகளில் நான் அறிந்தவரையில் காசு வைத்து விளையாடியதில்லை. இப்படி விளையாடுகிற போது பந்தயத்தில் தோற்றுப் போகிறவர்களுக்கு ஒரு தண்டனை உண்டு. தோற்றுப் போனவர் அடுத்த ஆட்டம் முடிகிற வரை ஆடாமல், அசையாமல் தலையணையை தலையில் சுமந்தபடி உட்கார்ந்து ஆட வேண்டும்.

பார்ப்பதற்கு ரொம்பக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். காசில்லாமல் ஆடுவதற்கு இந்தத் திட்டத்தை உருவாக்கியவரே இந்தத் தோட்டத் தூயவர் தான்.

எப்போதாவது ஒரு சில நேரங்களில் இவரும் கூட தன் தலையில் தலையணையைச் சுமந்திருக்கிறார்.

இப்போது கற்பனை செய்து பார்த்தால் உங்களுக்குக் கூட சிரிப்பு வரும். இப்படி விளையாடுகிற போது நிறைய மோர் அருந்துவார். மற்றவர்களுக்கும் தரச் சொல்லுவார்.

09.10.1988

(தொடரும்)

You might also like